Tuesday, August 21, 2007

பள்ளிக்கூடம் விமர்சனம்

அறந்தாங்கியில்
நான்கு முறை திரையரங்கில்
அழகி படம் பார்த்தேன்..

திருட்டு விசிடியில்
நான்கு முறை
திருப்பி பார்த்தேன்...

சொல்ல மறந்த கதை
நல்ல படம் இது என்று
வாதாடி வெற்றி கொண்டிருக்கிறேன்..

பட்டுக்கோட்டை ராசாமணியில்
தென்றல் பார்த்தேன்
நாவலை திரையில் படித்த பிரமிப்பு...

சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி
இதை இவர் செய்ய வேண்டிய தேவை என்ன
என்று மனதிற்குள் சுட்டது.....

இப்போது பள்ளிக்கூடம் படம் பார்த்தேன்
இன்று புரிகிறது ஏன்
இவர் நடிக்க வேண்டும்....

தலைநகர் சென்னையில்
இந்த படத்தை பார்க்கிறேன்.
எவ்வளவு மாற்றம் படத்தில்... தான்...

ரோடு ஃகோம் படம் இந்த படம் வந்ததும் காணாமல்
போகப்போகிறது என்று நம்பிவிட்டு போனேன்.
என்ன ஆச்சு தங்கர் ஐயா.....

சினேகா சீமான் மட்டும் நடிக்கிறார்கள்
மற்றவர்கள் என்ன செய்யகிறார்கள்
தங்கர் அவர்களையும் சேர்த்து.....தான்.....

கதைபற்றி குத்தம் சொல்ல யாருக்கும் உரிமைகிடையாது
என்றாலும் இந்த கதையைக் கண்டிப்பாக
குற்றமே சொல்ல முடியாது.

திரைக்கதையில் ஆரம்பிக்கிறது தொய்வு
ஃபுல் ஃபோகசைப் பற்றிப் பேசும்
அவரது கேமராவின் கண்கள் வரை அத்தனையிலும் ஓளியில்லை..

ஒவியத்தை வரையத் தெரிந்திருந்தும்
ஒருசாரருக்கு என்று நினைத்து ஒரு
காவியத்தை கலைத்தது நியாமா அவருக்கு..

இதை நீங்கள் எந்த திரைதிருவிழாவிற்கும்
அனுப்பி வைக்க முடியாது
அவ்வளவு மோசம் செய்யதது ஏன்....

கலாச்சாரத்தை பற்றி பேசும் தலைவா....
தொழில்நுட்பம் இல்லாது போனால்
நம் கலாச்சாரம் கடல் கடக்காது...

ஏன் நீங்கள் இந்த படத்தை முறையாக
மீண்டும் நல்ல தரத்தோடு தகுந்த நடிகர்களைக்
கொண்டு உருவாக்கிடக் கூடாது.....

நான் நன்றாக கற்றுக் கொண்டேன் ஒரு நல்ல படத்திற்கான தரத்தை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமென்று.......

No comments: